தி ஃபேமிலி மேன் முதலாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
பின்னர் அந்தத் தொடரின் இரண்டாவது சீசன் அமேசான் பிரைமில் இந்த வருடம் ஜூன் மாதம் இந்தியில் வெளியானது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும், குறிப்பிட்ட சில காட்சிகளில் தமிழர்களை தவறாக சித்தரித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.
மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர், சமந்தா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இணையர்கள் இந்தத் தொடரை இயக்கியிருந்தனர். இவர்களே முதல் சீசனையும் இயக்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த இரண்டாவது சீசன் தெலுங்கு மற்றும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு முதல் சீசன் போல வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டப்பிங் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மேற்கண்ட டப்பிங் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
மேலும் இந்த வெப் சீரிஸின் இயக்குனர்களும் தங்களது இன்ஸ்டாகிராமில் மொழிமாற்றம் குறித்த கேள்விக்கு "இந்த மாதம்" என பதில் அளித்துள்ளனர். ஆகையால் விரைவில் இந்த வெப் சீரிஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகலாம்.