www.garudavega.com

தர்ஷன்.. லாஸ்லியா.. நம்ம BIGGBOSS பிரபலங்களுடன்.. யோகிபாபு இணையும் ரீமேக் படத்தின் தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் வெளியாகி பெரும் அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். இந்த திரைப் படத்தின் தமிழ் ரீமேக் தற்போது தயாராகி வருகிறது.

Tharshan, Losliya, Yogi Babu google kuttappa first look date

இந்தத் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தர்ஷன், லாஸ்லியா உள்ளிட்ட பிரபலங்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து யோகிபாபு, மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார் இணைந்து நடித்து இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த நிலையில், ‘கூகுள் குட்டப்பா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். சபரி சரவணன் இயக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பல்வேறு புராஜக்ட்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் சக போட்டியாளர்களான தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடிப்பது அவர்களுடைய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இதேபோல் லாஸ்லியா, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் ஃபிரண்ட்ஷிப் திரைப் படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: வெளியான "RRR" பட பாடல்!.. பிரம்மாண்ட மியூசிக் டைரக்டருடன் இணைந்த அனிருத்! பட்டையை கிளப்பும் Video

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Tharshan, Losliya, Yogi Babu google kuttappa first look date

People looking for online information on Ks ravikumar, Losliya, Tharshan, Yogi Babu will find this news story useful.