தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 படங்களின் மூலம் புகழ்பெற்றவர் இயக்குநர் சி.எஸ்.அமுதன்.
மிர்ச்சி சிவா நடிப்பில் அமுதன் இயக்கிய தமிழ்ப்படம், தமிழ்த் திரைப்படங்களின் ஸ்பூஃப் வடிவமாக வெளியாகி ரசிகர்களிடையே காமெடி படமாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் தான் சி.எஸ்.அமுதன் தமது அடுத்த படம் க்ரைம் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாவதாக அறிவித்துள்ளார். சி.எஸ்.அமுதனின் இயக்கத்தில் நகைச்சுவையாக தமிழ்ப்படம் வரிசைகளை பார்த்த ரசிகர்களுக்கு, அவரது உருவாகவிருக்கும் ஒரு க்ரைம் ஆக்ஷன் த்ரில்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் குறித்த தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் சி.எஸ்.அமுதன், தன்னுடைய அடுத்த படம் விஜய் ஆண்டனியுடன் என்றும் அதற்கான பணிகள் இப்போது நடப்பதாகவும் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழு விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் க்ரைம்/ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தின் தலைப்பு டீசண்டாகவும் பாசிட்டிவாகவும் இருக்கும் என்றும் அந்த டைட்டில் விரைவில் அறிவிக்கபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
So my next film is with my college-buddy @vijayantony & will be produced by @FvInfiniti . Pre-production is underway & the rest of a huge cast is being finalised. The film is a crime/action-thriller & as befits a Vijay Antony film a decent & positive title will soon be announced https://t.co/uisj8x2rwa
— CS Amudhan (@csamudhan) April 15, 2021
பொதுவாக நடிகர் விஜய் ஆண்டனி தன் படங்களுக்கு பிச்சைக்காரன், சைத்தான், எமன், கொலைகாரன் என நெகடிவ் டைட்டில்களை வைத்து கவனம் ஈர்ப்பவர். அதனால் தான் இந்த படத்தின் டைட்டில் பாசிடிவாக இருக்கும் என இயக்குநர் சி.எஸ்.அமுதன் குறிப்பிட்டுள்ளார் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
ALSO READ: 'அருண் விஜயின் புதிய படம்'... பட்டாசாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!