Viruman Mobiile Logo top
www.garudavega.com

"திருமண PHOTO கூட இல்ல.!" - தாமரை & பார்த்தசாரதியை நெகிழ வெச்ச BB JODIGAL 2

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டவர் தாமரை செல்வி.

Thamaraiselvi Parthasarathi wedding moments BB Jodigal 2

Also Read | Twitter-ல புது DP மாத்துன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இதான் காரணமா?

நாடக கலைஞரான இவர் உள் தமிழகத்தில் நாடகக்கலை ரசிகர்களுக்கு நன்கு பரீட்சமானவர். பலரும் இவரது நாடகத்தை கண்டிருக்கின்றனர். நாடகத்தில் பாடல் பாடுவது, நடனம் ஆடுவது உள்ளிட்ட பன்முக திறமைகளை வெளிப்படுத்தி வந்த தாமரைசெல்வி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் ராஜூ வெற்றி பெற்றார். எனினும் கடைசிவரை தாமரை செல்வி போட்டியில் இருப்பார் என்று எதிர்பார்த்ததாகவும், அவர் விலகியது தனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்ததாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.

Thamaraiselvi Parthasarathi wedding moments BB Jodigal 2

இந்த நிலையில்தான் பிக்பாஸ் போட்டியாளர்களை மையமாக வைத்து விஜய் டிவியில் நடக்கும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தம்முடைய கணவர் பார்த்தசாரதியுடன் கலந்து கொண்டு நடனம் ஆடினார் தாமரை செல்வி.

Thamaraiselvi Parthasarathi wedding moments BB Jodigal 2

இதனைத் தொடர்ந்து பேசிய பார்த்தசாரதி "நாங்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் திருமணம் செய்துகொண்டோம். அது ஒரு சில நண்பர்கள் மத்தியில் நடந்த திருமணம்தான்.. எங்களிடம் திருமண புகைப்படம் கூட கிடையாது.!" என்று உருக்கமாக பேச,  உடனடியாக விஜே பிரியங்கா, "நீங்கள் இருவரும் மணக்கோலத்தில் தயாராகுங்கள்.. உங்களுக்கு இங்கு திருமணம் நடக்கப் போகிறது" என்று கூறினார்.

Thamaraiselvi Parthasarathi wedding moments BB Jodigal 2

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மணக்கோலத்தில் வந்தனர். விஜய் டிவி BB Jodigal 2 நிகழ்ச்சி அரங்கத்தில் இவர்கள் இருவரும் மீண்டும் மாலை மாற்றிக் கொண்டனர். அதன் பின்னர் தாமரை செல்வி, "இதை மறக்கவே முடியாது" என்று குறிப்பிட்டு கண்ணீர் மல்க நன்றி சொல்லி பேசினார். இப்போது இவர்களுக்கு ஒரு திருமண புகைப்படம் கூட ரெடி ஆகிவிட்டது. வாழ்த்துக்கள் - தாமரைசெல்வி பார்த்தசாரதி!

Also Read | நடிகர் விஷாலுக்கு.. மீண்டும் காயம்!!படப்பிடிப்பு தளத்தில் நடந்தது என்ன.?

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thamaraiselvi Parthasarathi wedding moments BB Jodigal 2

People looking for online information on Bb jodigal 2, Thamaraiselvi Parthasarathi wedding moments, Vijay Television will find this news story useful.