நகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். ஆரம்பத்தில் குறும்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த இவர் யாருக்கும் உதவி இயக்குநராக இல்லாமல் நேரிடையாக இயக்குநர் ஆனது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இன்னும் ஒரு படி மேலாக அவர் எடுத்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அவர் திறமையை பறைசாற்றும் விதமாகவே அமைந்தது.
கைதி படத்தில் கார்த்தியை வைத்து இயக்கியபிறகு விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார் லோகேஷ். இதில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தான், மாஸ்டர் மகேந்திரன் என்று ஒரு பெரிய பட்டாளமே கூட்டு சேர்ந்துள்ளது. மார்ச் மாதம் இந்த படத்தின் பாடல்கள் வெளியானதை அடுத்து விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், லாக் டவுன் காரணத்தால் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படத்துக்காக ரசிகர்கள் பேராவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இன்று மாலை 6 மணிக்கு திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஸ்ரீனியுடன் இன்ஸ்டாவில் லைவ் வர உள்ளார். மாஸ்டர் படம் பற்றி புதிய தகவல்களை கேட்க ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
This #weekend I'll be hosting film mking workshop wit d latest sensation frm Tamil industry director @Dir_Lokesh will tlk abt Y his films #Maanagaram and #Kaithi becm trend setters. His nxt venture s #Master *rring #Vijay and @VijaySethuOffl. Join us on Insta 26 at 6 pm. pic.twitter.com/ylfhPh400j
— SRINI (@lordmgsrinivas) April 23, 2020