''தலைவர் கூட டான்ஸ், அத விட வேற என்ன வேணும் ?'' - தளபதி விஜய்யின் மாஸ்டர் பிரபலம் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நாட்டாமை' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகனவர் மாஸ்டர் மகேந்திரன். துறுதுறு சிறுவனாக இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் 'முத்து', தளபதி விஜய்யுடன் இணைந்து 'மின்சாரக்கண்ணா', தல அஜித்துடன் இணைந்து 'முகவரி' என பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக பாண்டியராஜனுடன் இணைந்து 'தாய்க்குலமே தாய்க்குலமே' படத்தில் இவர் செய்யும் சேஷ்டைகளை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அதன் பிறகு விழா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், தற்போது தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் முத்து படத்தில் குலுவாலிலே பாடலில் சூப்பர் ஸ்டாருடன் மாஸ்டர் மகேந்திரன் நடனமாடிய வீடியோவை பகிர்ந்திருந்தார். அதற்கு பதிலளித்த மகேந்திரன், ''தலைவர் கூட டான்ஸ், அத விட வேற என்ன வேணும்?''  என்று சிலாகித்துள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay's Master Mahendran shares about Superstar Rajinikanth | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் நடித்த அனுபவம் குறித்து தளபதி வ�

People looking for online information on Master, Master Mahendran, Rajinikanth, Superstar will find this news story useful.