BREAKING: விஜய்யின் மாஸ்டர் VS சென்னை சூப்பர் கிங்க்ஸ்... மோதலா ? விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படம் வருகிற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் இருந்து தற்போது குட்டி ஸ்டோரி பாடல் நல்ல ஹிட் அடித்து வருகிறது.

Thalapathy Vijay, Vijay Sethupathi's Master migh be Clash to Chennai Super Kings With Kings XII Punjab Match,

இந்நிலையில் தற்போது இந்த வருடத்துக்கான ஐபிஎல் போட்டிகள் எந்தெந்த தேதிகளில் நடைபெறும் என்ற கால அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இதில் முதல் போட்டி வருகிறத மார்ச் 29 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெறவிருக்கிறது.

இதனையடுத்து ஏப்ரல் 11 சென்னையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மற்றும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதுகின்றன. ஏப்ரல் 9 ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில், ஏப்ரல் 11 சனிக்கிழமை விடுமுறை தினம் மற்றும் போட்டி சென்னையில் நடைபெறுவது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும். 

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, ஷாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செயகிறார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay, Vijay Sethupathi's Master migh be Clash to Chennai Super Kings With Kings XII Punjab Match,

People looking for online information on Chennai Super Kings, Master, Vijay, Vijay Sethupathi will find this news story useful.