www.garudavega.com

VARISU : தணிக்கையில் கிடைத்த ரிசல்ட் என்ன..?!.. வாரிசு படத்தின் சென்சார் அப்டேட்!!..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார்.

Thalapathy Vijay Varisu movie censor board certificate reportedly

Also Read | "Ticket To Finale".. பிக் பாஸின் Super அறிவிப்பு.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. அடுத்து என்ன நடக்கும்?

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Thalapathy Vijay Varisu movie censor board certificate reportedly

மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த டிசம்பர் 24 ஆம் தேதியன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றிருந்தது.

இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வாரிசு படத்தின் 5 பாடல்களும் வெளியாகி இருந்தது.

Thalapathy Vijay Varisu movie censor board certificate reportedly

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசி இருந்த விஷயங்களும் பெரிய அளவில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த நிலையில், வாரிசு படத்தின் சென்சார் முடிவுகள் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதன்படி, வாரிசு படத்தின் தணிக்கை சமீபத்தில் முடிவடைந்துள்ளதாகவும், மேலும் இந்த படத்திற்கு ஒரு Cut கூட இல்லாமல் "U" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | "மைனா சொன்னத நம்பி".. விக்ரமன்கிட்ட ஆத்திசூடி கத்துகிட்ட அமுது.. Lastல பிக்பாஸ் வெச்ச ட்விஸ்ட்!!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay Varisu movie censor board certificate reportedly

People looking for online information on Thalapathy Vijay, Varisu, Varisu movie censor board certificate, Vijay will find this news story useful.