நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.
Also Read | உலகின் உயரமான முருகன் சிலை கொண்ட கோவிலில் வழிபாடு செய்த நடிகர் யோகி பாபு..
முன்னதாக நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த 'பீஸ்ட்' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது.
இதற்கு அடுத்தபடியாக வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஹரி, ஆஷிஷோர் சாலமன் மற்றும் விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பு, எஸ்ஜே சூர்யா, பிரபு, ஷ்யாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக வாரிசு படத்தின் டைட்டில் அறிவிப்புடன் சில போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வாரிசு திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனிடையே, வாரிசு படத்தின் முதல் சிங்கிளாக "ரஞ்சிதமே" சமீபத்தில் வெளியாகி இருந்தது. எஸ் தமன் இசையில், நடிகர் விஜய் மற்றும் பாடகி மானசி ஆகியோர் இணைந்து பாடி இருந்த இந்த பாடல், ட்ரெண்டிங்கில் இருந்து வருவதுடன் யூடியூபில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது.
இந்த நிலையில், வாரிசு படத்தின் ஷூட்டிங் அப்டேட் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, வாரிசு படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது பெல்லாரியில் வைத்து நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. பொங்கல் விருந்தாக வாரிசு திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களையும் ரசிகர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
Also Read | "நான் வண்டி ஒட்டிட்டு போறப்போ, Checkingல இருக்குற போலீஸ் வந்து".. GVM பகிர்ந்த சீக்ரெட்ஸ்!!