www.garudavega.com

BREAKING: மீண்டும் லோகேஷ் கனகரராஜுடன் இணையும் தளபதி விஜய் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு உறுதியாக தெரிவித்துள்ளது. கொரோனா பிரச்சனைகள் முடிந்த பிறகு மாஸ்டர் வெளியாகும் நாளுக்கு ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

'மாஸ்டர்' படத்துக்கு பிறகு நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 65' படத்தில் நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கவிருப்பதாகவும், தமன் இந்த படத்துக்கு இசையமைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'தளபதி 65' படம் வருகிற 2021 ஆம் ஆண்டு துவக்கத்தில் படத்தில் துவங்கப்பட்டு அந்த வருட தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 65 படத்துக்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த படம் 2021 ஆம் ஆண்டு இறுதியில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay to Join again director Lokesh Kanagaraj after Master | மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகரராஜுடன் இணையும் தளபத

People looking for online information on Lokesh Kanagaraj, Master, Thalapathy 66, Vijay will find this news story useful.