தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' நடிகை, தனுஷ் படத்தில்... - இயக்குநருடன் இருக்கும் ஃபோட்டோ வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்குநராக களமிறங்கிய படம் '96'. விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்த இந்த படத்தில் த்ரிஷாவின் சிறு வயது வேடத்தில் குட்டி ஜானுவாக ரசிகர்களை கவர்ந்தவர் கௌரி கிஷன்.

Thalapathy Vijay Master, Gouri Kishan to act in Dhanush and Mari Selvaraj's Karnan

இதனையடுத்து அவர், தமிழில் தளபதி விஜய்யுடன் இணைந்து 'மாஸ்டர்', '96' தெலுங்கு ரீமேக்கான 'ஜானு' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷின் 41வது படமான கர்ணனில் நடிக்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என இயக்குநர் மாரி செல்வராஜூடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

'கர்ணன்' படத்தை மாரி செல்வராஜ் இயக்க, வி கிரியேஷன்ஸ் சார்பாக, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க, லால் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

Entertainment sub editor

Thalapathy Vijay Master, Gouri Kishan to act in Dhanush and Mari Selvaraj's Karnan

People looking for online information on Dhanush, Gouri Kishan, Karnan, Mari Selvaraj, Master, Santhosh Narayanan will find this news story useful.