உலகம் முழுவதும் ஒரு வருடத்துக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை உண்டு செய்து வருகிறது.
இந்த கொரோனா வைரஸை எதிர்ப்பதற்காக கடந்த நாட்களில் கொரோனா தடுப்பூசி வெகு வேகமாக கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே பலநாடுகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த நிலை இந்தியாவுக்கும் உருவானது.
ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது கொரோனாவை எதிர்கொள்வதற்கு மிகப்பெரிய சவாலாகவே மாறி இருக்கிறது. குறிப்பாக வட இந்தியாவில் இப்படியான தகவல்கள் அதிகம் வருகின்றன. இந்த நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் செய்துள்ள உதவி நெகிழ வைத்திருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் கொரோனாவை எதிர்கொள்வதற்கு நம்மிடம் இருக்கும் அடிப்படை வழிமுறைகள் கைகளை சுத்தம் செய்தல், மாஸ்க் அணிதல், தேவையான ஆக்சிஜன் இருப்பு வைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளாகவே இருக்கின்றன. அந்த வகையில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த தளபதி விஜய் ரசிகர்கள் முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வழங்கி நெகிழ வைத்திருக்கின்றனர்.
தளபதி விஜய்யை பொருத்தவரை தளபதி 65 படத்தின் படப்பிடிப்புக்காக எலக்சன் முடிந்த கையோடு ஜார்ஜியாவுக்கு சென்றார். அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் அண்மையில் மீண்டும் தமிழகம் திரும்பி வந்த முதல் வேலையாக மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் இல்லத்துக்கு சென்று துக்கம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.