www.garudavega.com

விஜய் நடிக்கும் 'LEO'.. காஷ்மீரில் இருந்து லீக் ஆன வீடியோவுக்கு தயாரிப்பாளரின் பரபர RETWEET!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

Thalapathy Vijay Leo Producer Statement about Leaked Video

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஹைதராபாத்தில்... பான் இந்தியன் ஸ்டார் பிரபாஸ் கொடுத்த Super சர்ப்ரைஸ்.. நெகிழ்ந்த ரசிகர்கள்!!

இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  சில நாட்களுக்கு முன் வெளியானது. S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.

Thalapathy Vijay Leo Producer Statement about Leaked Video

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

Thalapathy Vijay Leo Producer Statement about Leaked Video

Images are subject to © copyright to their respective owners.

லியோ படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை சன் டிவியும், ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றி உள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Thalapathy Vijay Leo Producer Statement about Leaked Video

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காஷ்மீர் படப்பிடிப்பில் இருந்து லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகின. இதனால் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் டிவிட்டரில் ஒரு ட்வீட் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் "லியோ படத்தின் லீக் செய்யப்பட்ட புகைப்படங்கள் & வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தால் அந்த பதிவுகள் உடனடியாக முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | பிக் பாஸ் ஆரியின் Thorwback ப்ரொபோஸல் Scene.. இந்த படத்துலயா? ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!

விஜய் நடிக்கும் 'LEO'.. காஷ்மீரில் இருந்து லீக் ஆன வீடியோவுக்கு தயாரிப்பாளரின் பரபர RETWEET! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay Leo Producer Statement about Leaked Video

People looking for online information on Leo, Leo Producer, Thalapathy Vijay, Vijay will find this news story useful.