குமார்-விஜி இருவரும் தளபதி விஜயின் Die Hard ரசிகர்கள். தம்பதியான இவர்கள் விஜய்யை நேரில் சந்திக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து சமீபத்தில் அந்த வாய்ப்பை பெற்றனர்.
இருவரையும் சந்தித்த விஜய் அவர்களிடம் உரையாடியுள்ளார். குமார் அவரை சந்திக்க 20 ஆண்டுகள் போராடியதை கேட்டு, இத்தனை ஆண்டுகள் பார்க்க வாய்ப்பு இல்லாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். பார்வைத்திறன் இன்றியிருந்தாலும் 2 குறும்படங்களை இயக்கியுள்ளார் குமார். விஜயுடன் திரையில் தோன்ற வேண்டும் என்ற தன் ஆசையை அவரிடம் முன்வைத்த குமார், விஜய் கூறியவற்றை இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.