RRR Others USA
www.garudavega.com

அப்போ பிரபாஸின் PAN INDIA பட ஒளிப்பதிவாளர்.. இப்போ தளபதி 66-க்கு DOP! யார் இந்த கார்த்திக் பழனி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஆண்டு சமீபத்தில் தான், இவரது அடுத்த படம் - தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Thalapathy 66 Movie Director Of Photography Karthick Palani

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thalapathy 66 Movie Director Of Photography Karthick Palani

இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் இணைந்துள்ளார். விஜய்யின் பைரவா படத்தின் எடிட்டரும் இவர் தான். வமசியின் சில படங்களில் எடிட்டராகவும் பணியாற்றி உள்ளார். 

Thalapathy 66 Movie Director Of Photography Karthick Palani

இப்படத்திற்கு வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து கதை, திரைக்கதையை ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் எழுதியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய,  ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆவர்.

Thalapathy 66 Movie Director Of Photography Karthick Palani

இதில் கார்த்திக் பழனி பென்குயின், ஆடிபுருஷ் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். கார்த்திக் பழனி மெர்குரி (2018) மற்றும் பேட்ட (2019) ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளர் திருவின் உதவியாளராக பணியாற்றினார். பல ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றினார் 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy 66 Movie Director Of Photography Karthick Palani

People looking for online information on Karthick Palani, Thalapathy66, Vijay will find this news story useful.