KAAPAN USA OTHERS

‘குட்டி கதை நண்பா VS ஒரு கதை சொல்லட்டுமா சார்’ - ‘தளபதி 64’ ஷூட்டிங் பிளான் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிகக்விருக்கிறார்.

Thalapathy 64 Villain Vijay Sethupathi shoot starts from December

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லி-விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில், விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தை ‘மாநகரம்’,‘கைதி’ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின்ராஜ், இசையமைப்பாளர் அனிருத், ஆகியோர் இப்படத்தில் பணிபுரிகின்றனர்.

நடிகர் விஜய்யின் 64வது படமாக உருவாகவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கவிருப்பதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்த நிலையில்,  இப்படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் அக்.3ம் தேதி முதல் சென்னையில் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி வரும் டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘விக்ரம் வேதா’, ‘பேட்ட’ உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லத்தனத்தில் வெறித்தனம் காட்டிய விஜய் சேதுபதி தற்போது வெறித்தனம் ஹீரோ விஜய்யுடன் மோதவிருக்கிறார். கதை சொல்வதில் மன்னர்களான விஜய்யும், விஜய் சேதுபதியும் மோதவிருப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy 64 Villain Vijay Sethupathi shoot starts from December

People looking for online information on Bigil, Lokesh Kanagaraj, Thalapathy 64, Vijay, Vijay Sethupathi will find this news story useful.