அமெரிக்க க்ரைம் படம் குறித்து ‘தளபதி 64’ திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
‘கைதி’ திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘தளபதி 64’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் பேனரில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.
மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி, விஜே ரம்யா, டிக் டாக் புகழ் லிண்டு ரோணி, கல்யாணி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.
இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் வெளியான அமெரிக்கன் எபிக் க்ரைம் த்ரில்லர் படமான The Irishman திரைப்படம் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘எங்க Gangster பட குலசாமிகளே..!’ என குறிப்பிட்டுள்ளார்.
தளபதி 64 திரைப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் தனது ட்விட்டர் பக்கத்தில், The Irishman திரைப்படம் குறித்து, ‘எங்க Gangster பட குலசாமிகளே..!’ என குறிப்பிட்டுள்ளார்.
எங்க Gangster பட குலசாமிகளே 😂😂 https://t.co/ujMicVLjkC
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 5, 2019