கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பொது நிகழ்வுகள் எதுவும் நடத்தப்பட வேண்டாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதனால் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் கூட எளிமையாக முக்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்த வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்பதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிக் கல்லூரிகளுக்கு வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மக்கள் அவசியம் என்றால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் விஸ்வாசம் பட பாடலாசிரியர் அருண் பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில், ''இன்று பத்மாவின் பிறந்தநாளையும் வளைகாப்பையும் ஒன்றாக நடத்த மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே கனவுகளோடு அவ்வளவு ஏற்பாடுகளும் செய்தோம். ஆனால் விழிப்புணர்வின் சிறு துளியாக நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, அந்த பணத்தில் எளிய மக்களுக்கு சிறிய அளவில் உதவியதில் மன நிறைவு'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று பத்மாவின் பிறந்தநாளையும் வளைகாப்பையும் ஒன்றாக நடத்த மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே கனவுகளோடு அவ்வளவு ஏற்பாடுகளும் செய்தோம். ஆனால் விழிப்புணர்வின் சிறு துளியாக நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, அந்த பணத்தில் எளிய மக்களுக்கு சிறிய அளவில் உதவியதில் மன நிறைவு. @padmavathyvae pic.twitter.com/HrvZzGbEyC
— Arun Bharathi Lyricist (@ArunbharathiA) March 22, 2020