'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு தல அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
பிரபல தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதியளித்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அவ்வப்போது சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 'ஆர்எக்ஸ் 100' உள்ளிட்ட படங்களில் நடித்த தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது.
இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கார்த்திகேயா தனது ட்விட்டர் பக்கத்தில் சிக்ஸ்பேக்குடன் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட அது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதில், ''இந்த லாக்டவுன் நம் திட்டங்களை மாற்றி விட்டது. ஆனால் அது நம் இலக்கை அது தடுக்காது'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த பதிவிற்கு தல அஜித் ரசிகர்கள் 'வலிமை' படத்திற்காக அஜித்துடன் இணைந்து நடிக்கும் காட்சிகளுக்கு காத்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
Lockdown changed our plans..
But it can’t effect our goals🤷♂️ pic.twitter.com/Zgm7u8hdZq
— Kartikeya Gummakonda (@ActorKartikeya) May 27, 2020