‘மேகாமான்’, ‘தடையற தாக்க’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநர் மகிழ்திருமேனி ஆர்யா நடிக்கும் ‘டெடி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.
சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வெற்றியை பெற்ற ‘தடம்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மகிழ்திருமேனி, ஆர்யா நடிக்கும் ‘டெடி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் சாயீஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் ‘டெடி’ திரைப்படத்தை இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் மகிழ்திருமேனி தனது காட்சிகளுக்கான ஷூட்டிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இதனை இயக்குநர் மகிழ்திருமேனி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திரைப்படங்கள் இயக்குவது மட்டுமின்றி இயக்குநர் மகிழ்திருமேனி, அஜய் ஞானமுத்து இயக்கிய த்ரில்லர் படமான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப்பின் ‘ருத்ரா’ என்ற கேரக்டருக்கு தனது கம்பீரமான குரல் மூலம் வில்லத்தனம் கூட்டி ரசிகர்களை கவர்ந்தார்.
#MagizhThirumeni has completed shooting for #Teddy!! Happy to launch his acting debut! Watch out for him👍👍 pic.twitter.com/3Lfqi3uFuH
— Shakti Soundar Rajan (@ShaktiRajan) November 12, 2019