கடந்த மூன்று சீன்களாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 வது சீசன் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டு நேற்றைய தினம் கமல்ஹாசன் பங்குபெற்ற புரோமோவையும் விஜய் டிவி வெளியிட்டது. நிகழ்ச்சி எப்பொழுது துவங்கும் என்பது போன்ற தகவல்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன் தனக்கெ உரிய பாணியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை அறிவித்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தமிழைப் போலேவே ஹிந்தியில் சல்மான் கானும், தெலுங்கில் நாகர்ஜூனாவும் தொகுப்பாளர்களாக பங்கு பெறும் நிகழ்ச்சியின் புரோமோ ஏற்கனவே வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி சார்பாக புரொமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Keep your TV Remote Ready for Entertainment Like Never Before!!! #WhatAWowWow 👁️#BiggBossTelugu4 Premieres September 6th at 6 PM on @StarMaa pic.twitter.com/5bbL4TsEjT
— starmaa (@StarMaa) August 27, 2020