அமெரிக்காவில் 1989-ம் ஆண்டு வெளியான பிரபல தொலைக்காட்சி திரைப்படம்‘டார்சன் இன் மன்ஹாட்டனில்’.
இந்த படத்தில் தான் ஜோ லாரா டார்சன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் லாராவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தர, தொடர்ந்து 1996 - 1997 -ம் ஆண்டுகளில் "டார்சன்: தி எபிக் அட்வெஞ்சர்ஸ்" என்கிற தொலைக்காட்சி தொடரிலும் லாரா நடித்தார்.
மேலும் பல படங்களில் நடித்த ஜோ லாரா, 2002-ம் ஆண்டுடன் நடிப்பு இசை மீதும் தனது ஆர்வத்தை திருப்பினார். பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு க்வென் ஷாம்ப்ளினை மணம் செய்தார். பின்னர் 1999ல் டென்னசியின் பிரென்ட்வுட்டில் ஒரு தேவாலயத்தை க்வென் ஷாம்ப்ளின் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து அந்த தேவாலயத்தை நிர்வகித்து வந்தனர்.
இந்த நிலையில் தான் இருவரும் அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானத்தில் பயணம் செய்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக 12 மைல் தொலைவில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரியில் இந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த ஜோ லாரா, க்வென் ஷாம்ப்ளின் உட்பட 7 பேர் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கருதப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் ரதர்போர்ட் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு இந்த சிறிய ரக விமானம் பாம்பீச் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றதாகவும், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்த விமானம் பெர்சி பிரிட்ஸ் என்ற ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்து விரைந்து சென்ற ரதர்போர்ட் மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்க தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.