இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகியை முன்னிட்டு 4 தமிழ் படங்களுள், ஒரு ஹாலிவுட் படம், ஒரு தெலுங்கு படம், ஒரு இந்தி படம் என மொத்தம் 7 படங்கள் வெளியாகின்றன.
ராக்கி (2021)
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படம் கிறிஸ்துமசை முன்னிட்டு 23 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் வெளியீட்டுக்கு சினிமா ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த ராக்கி படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அனைத்து உரிமையையும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. 'A' சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் 2 மணி நேரம் 9 நிமிடம் ஓடக்கூடியது. உள்ளத்தில் அரக்கன் உயரத்தில் இறைவன் அரக்கனிடம் தப்பிக்க இறைவனிடம் அடைக்கலம் கேட்டேன் சாவடா என்று சபித்து விட்டான் துயரத்தில் நிற்க அரக்கன் வந்தான் வாழ் தந்தான் வாழடா என்று வாழ்த்தி சென்றான் இறைவன் கொடியவன் அரக்கன் மேலோன் எல்லை இல்லா வல்லமை கொண்ட இறைவா இந்த ஆதி புதிருக்கு விட தாரும் உன்னால் சுமக்க முடியாத பாரத்தை உன்னால் படைக்க இயலுமா? என்ற பிண்ணனி குரலுடன் வெளியான படத்தின் டிரெய்லர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ரைட்டர் (2021)
இயக்குநர் பா.ரஞ்சித்தின் "நீலம் புரொடக்ஷன்ஸ்" தயாரிப்பில், சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் இப்படத்தை இயக்கி இருப்பவர் பிராங்க்ளின் ஜேக்கப். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனியுடன் படம் முழுவதும் நடிகர் திலீபன் முக்கிய கதாபாத்திரத்தில் வலம் வருகிறார். இவர்களுடன் இனியா, போஸ் வெங்கட், சுப்ரமணியம் சிவா, ஹரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தை "லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ்" மற்றும் "கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ்" ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சமூக அரசியல் படமாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'U/A' சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் 2 மணி நேரம் 30 நிமிடம் ஓடக்கூடியது.
ஆனந்தம் விளையாடும் வீடு (2021)
நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பெரும் நடசத்திரங்கள் இணைந்து நடிக்க குடும்ப படமாக இப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை ஶ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார். ஷிவத்மிகா ராஜசேகர் நாயகியாக அறிமுகமாகிறார். 'U' சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் 2 மணி நேரம் 27 நிமிடம் ஓடக்கூடியது. இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது.
தள்ளிப்போகாதே (2021)
தள்ளிப்போகாதே படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன 'நின்னு கோரி' படம் தெலுங்கில் 18 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தபடம், 53 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் கண்ணன் தயாரித்து இயக்குகிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சண்முக சுந்தரம், இசையமைப்பாளராக கோபி சுந்தர், எடிட்டராக செல்வா ஆர்.கே ஆகியோர் பணிபுரிகின்றனர். பாடல்கள் மற்றும் வசனத்தை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். இந்த படத்தின் வெளியீடு மட்டும் பல காரணங்களால் பலமுறை தேதி குறிப்பிட்டும் ரிலீஸ் தள்ளிப்போனது. இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது. 'U' சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் 2 மணி நேரம் 03 நிமிடம் ஓடக்கூடியது.
ஷ்யாம் ஷிங்கா ராய் (2021)
நானி, சாய்பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் படம் #SSR 'ஷியாம் ஷிங்கா ராய்'. 'ஷ்யாம் ஷிங்கா ராய்' படத்தை ராகுல் சாங்கிருத்தியன் இயக்குகிறார். விஸ்வரூபம் படத்தின் ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். தேசிய விருதுப்பெற்ற 'ஜெர்சி' பட எடிட்டர் நவீன் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.சூப்பர் நேச்சுரல் திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது. கொல்கத்தா நகரை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 24 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நானி இரு வேடங்களில் நடிக்க, நடிகையாக கீரித்தி ஷெட்டியும், தேவதாசியாக, காதலியாக சாய்பல்லவியும் நடித்துள்ளனர், மடோனா செபாஸ்டியனும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். 'U/A' சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் 2 மணி நேரம் 37 நிமிடம் ஓடக்கூடியது.
This is 83 (2021)
இந்தியை மூலமாக கொண்டு ரன்வீர் சிங், ஜீவா, தீபிகா படுகோனே நடிப்பில் 83 படம் தாயாராகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் டிசம்பர் 24 ஆம் நாள் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 1983 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதி ஆட்டத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இதனை மையமாக வைத்தும் கபில்தேவின் வாழ்க்கை சம்பவங்களை கொண்டும் 83 படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் ரோலில் தமிழ் நடிகர் ஜீவாவும், கபில் தேவாக நடிகர் ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இதில் கபில் தேவ் மனைவி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரன்வீர் சிங் தீபிகா படுகோனே இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். 'U' சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் 2 மணி நேரம் 42 நிமிடம் ஓடக்கூடியது.
மேற்சொன்ன படங்களுடன் ஹாலிவுட் படமாக கீனு ரீவ்ஸ், பிரியங்கா சோப்ரா நடித்துள்ள மேட்ரிக்ஸ் படத்தின் 4ஆம் பாகமாக வெளியாக உள்ளது.