நடிகர் இயக்குனர் டி.பி. கஜேந்திரன் மறைவுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இயக்குனர் கஜேந்திரன், முதல்வர் முதல்வர் ஸ்டாலினின் கல்லூரி கால நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.பி.கஜேந்திரன், சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று அதிகாலை டி.பி.கஜேந்திரன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 69.
Images are subject to © copyright to their respective owners.
இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
"பிரபல இயக்குனரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர், திரு. டி.பி.கஜேந்திரன் அவர்கள் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி, கலையுலகிற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர். கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன்.
தற்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பது வேதனையளிக்கிறது. திரு. டி.பி. கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.