www.garudavega.com

பாடகர் SPB-க்கு தமிழக அரசு செய்யப்போகும் மரியாதை இதுதான்... அறிவித்தார் முதல்வர் பழனிசாமி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் நேற்றைய தினம் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி நம்மை விட்டு இயற்கை எய்தியுள்ளார்.  தன்னிகரற்ற பாடகருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tamilandu Government to do this for singer SPB SPB-க்கு அரசு செய்யப்போகும் மரியாதை

இந்நிலையில் அன்னாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக "பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்"என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது  அறிவித்துள்ளார். மேலும் தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி.பி-இன் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல்துறை மரியாதை செய்யப்படும்" என்று அவர் அறிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு சிறிய ஆறுதலை அளித்துள்ளது. காலங்கள் கடந்த கலைஞனுக்கு நிச்சயம் இந்த மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Tamilandu Government to do this for singer SPB SPB-க்கு அரசு செய்யப்போகும் மரியாதை

People looking for online information on Death, SP Balasubramaniam, SPB will find this news story useful.