விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2-ஆம் பாகம் சீரியல்களில் நடித்த வீணா வெங்கடேஷ், தற்போது அந்த சீரியல்களில் நடிக்க முடியாமல் போனதாகவும், மீண்டும் அந்த சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்குமா என்று தெரியவில்லை என்றும் அப்படி அதிசயம் நடந்தால் பெரிய விஷயம் என்றும் உருக்கமாக அழுது பேசி வீடியோ பதிவிட்டிருக்கிறார்.
அதில், “வணக்கம். விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் மீனாட்சி என்கிற கதாபாத்திரத்தில் என்னை பார்த்திருப்பீர்கள். இதேபோல் ராடான் மீடியாவின் சித்தி இரண்டாம் பாகத்தில் சுப்புலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் என்னை பார்த்திருப்பீர்கள். இந்த இரண்டு அற்புதமான புராஜெக்ட்களையும், இந்த 2 அற்புதமான கேரக்டர்களையும் நான் இழந்துவிட்டேன்.
அதற்கு காரணம் கொரோனா வந்தது தான். அந்த சமயம் எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துவிட்டது. மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. உங்களுடைய அன்பும் ஆதரவும் கொடுத்தீர்கள். எனக்கு கொரோனா இருக்கும் பொழுது நீங்கள் எல்லாம் எனக்காக பிரார்த்தனை செய்தீர்கள். என்னை மிஸ் பண்ணுவதாக குறிப்பிட்டீர்கள். மீண்டும் என்னை அதே கேரக்டரில் பார்க்க வேண்டும் என்று பலரும் எனக்கு மெசேஜ் அனுப்பினீர்கள்.
இந்த அன்பை எல்லாம் நான் இழந்து விட்டேன். இந்த இரண்டு சீரியல்களும், எனக்கு குடும்பம் போல இருந்தவை. எனக்காக மிகவும் காதிருந்தும் பார்த்தார்கள். ஆனால் டெஸ்ட் முடிவுக்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் இருந்தது. இன்னும் இரண்டு நாள் காத்திருந்தார்கள் என்றால் நான் காற்றுக்கென்ன சீரியலில் மீண்டும் வந்து இருப்பேன்.
ஆனால் அவர்களை குற்றம் சொல்ல முடியாது. அவர்களும் சீரியலை ஒளிபரப்பு செய்ய வேண்டும். அதனால் கனத்த இதயத்தோடு அவர்கள் எனக்கு பதில் வேறு நடிகர்களை மாற்றம் செய்து விட்டார்கள். ஆனால் எனக்கு இந்த இரண்டு கேரக்டர்கள் மீதும் ஒரு மிகப்பெரிய பிடிப்பு உண்டு. சித்தி இரண்டாம் பாகத்தில் நான் நடித்த சுப்புலட்சுமி கேரக்டர் காமெடியாக இருக்கும். அந்த கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதில் மீண்டும் தொடர முடியவில்லை என்பது ஒரு வருத்தம்.
மிகவும் குறுகிய காலத்திலும் எனக்கு அன்பும் ஆதரவும் கொடுத்தீர்கள். என்னுடைய போறாத காலம் இந்த இரண்டு புராஜெக்ட்களையும் என்னால் தொடர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மிகவும் உங்களை மிஸ் பண்ணுகிறேன். திடீரென்று ஒரு அதிசயம் நடந்து இந்த 2 சீரியல்களிலும் இருந்து என்னை அழைக்க மாட்டார்களா? மீண்டும் நாமே சென்று நடித்துவிட மாட்டோமா? என்று தோன்றுகிறது. தெரியவில்லை. அதிசயம் என்று ஒன்று இருந்தால் நடக்கலாம். அப்படி நடந்தால் உங்களை மறுபடியும் சந்திப்பேன். அப்படி நடக்கவில்லை என்றால், நிச்சயம் ஒரு புது புராஜெக்ட்டுடன், புது கேரக்டருடன், மறுபடியும் உங்கள் முன்னால் வந்து நிற்பேன்.
அதே சமயம் ஒரே ஒரு வேண்டுகோள். கொரோனா குறைந்து போய்விட்டது என்று யாரும் பொறுப்பில்லாமல் இருந்து விடாதீர்கள். என்னுடைய கனவெல்லாம் சிதறிப் போய் விட்டது. நான் ஆசைப்பட்டதெல்லாம் கைவிட்டுப் போய்விட்டது. மிகவும் சிம்பிளாக கொரோனாவை எடுத்துக்கொள்ளாதீர்கள். எவ்வளவு முன்னெச்சரிக்கை எடுத்துக்கொள்ள முடியுமா எடுத்துக்கொள்ளுங்கள். அதற்குத் தகுந்தாற்போல் கவனமாக இருங்கள். மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன். பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும் மகிழ்ச்சி இழந்துவிடுவோம். ஆக, கவனமாக இருங்கள். மாஸ்க் போடுங்கள்.
அடுத்து 3வது அலை இருப்பதாக கூறுகிறார்கள். மிகவும் கவனமாக இருங்கள். உடல் ஆரோக்கியம் முக்கியம். இல்லையென்றால் மொத்தமாக போய் விடும். அதற்கு நானே உதாரணம். மீண்டும் டிவியில் நல்ல வாய்ப்புகள் வலிமையான கதாபாத்திரங்கள் கிடைக்காதா என்பது தெரிவில்லை. மீண்டும் வருவேன். உங்களுடைய அன்புடனும் ஆதரவுடன். அனைவரும் தடுப்பூசி போடுங்கள். நான் தடுப்பூசி போட்டும் எனக்கு கொரோனா வந்துவிட்டது. அவ்வளவு எச்சரிக்கையாக இருந்தேன். இப்படி ஒரு நிலைமை என்னுடைய எதிரிக்குக் கூட வரக்கூடாது!” என்று வீணாக வெங்கடேஷ் பேசியுள்ளார்.