தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தின் 2022 - 2024ம் ஆண்டிற்கான தேர்தல் வரும் 25ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் நடைபெற்ற இயக்குநர் சங்கத்தின் 101ஆவது பொதுக் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்ட நிலையில் இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதன்படி 1 தலைவர், 2 துணைத் தலைவர்கள், 1 பொதுச்செயலாளர், 4 இணைச் செயலாளர்கள், 1 பொருளாளர், 12 செயற்குழு உறுப்பினர்கள் என்ற நிர்வாகக் குழுவுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இயக்குநர் பாரதிராஜாவின் 'இமயம்' அணி சார்பில் தலைவராக கே.பாக்யராஜும் , 'புது வசந்தம்' அணி சார்பில் தலைவராக ஆர்.கே.செல்வமணியும், போட்டியிடுகின்றனர். ஆர்.கே. செல்வமணி மீண்டும் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடுகிறார். புது வசந்தம் அணி சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார், எஸ். ரவிமரியாவும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். முறையாக வேட்பு மனு பூர்த்தி செய்யப்படாததால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இமையம் அணி
இந்நிலையில், இமையம் அணி சார்பில் போட்டியிட்ட இயக்குநர்கள் எழில், ஆர். மாதேஷ் துணைத்தலைவர்களாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது, இமையம் அணியில் போட்டியிடும் நபர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது."அணித் தலைவராக கே.பாக்யராஜ், செயலாளராக ஆர்.பார்த்திபன், பொருளாளராக வெங்கட்பிரபுவும் போட்டியிடுகின்றனர்.
புது வசந்தம் அணி
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி அணித் தலைவராகவும், செயலாளராக ஆர்.வி.உதயகுமாரும், பொருளாளராக எம்.பேரரசுவும் இணை செயலாளர்களாக சுந்தர்.சி., ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, என்.ஏகம்பவாணன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். தற்போது, தேர்தலுக்கான வாக்குறுதிகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.