இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசு விருது கிடைத்துள்ளது. இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் மத்திய அரசின் விருதுக்கு ‘ஒத்த செருப்பு’ தேர்வாகி உள்ளது.
இதேபோல் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் என்ற தமிழ் திரைப்படத்திற்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதனிடையே மத்திய அரசின் அரசிதழில் விருதுகள் பற்றி அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஊடகங்கள் இவை புதிதாக வழங்கப்பட்ட விருதுகள் என செய்தி வெளியிட்டன. இதை தொடர்ந்து, இந்த விருதுகள் குறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.அதில் கூறியதாவது, ''ஏற்கனவே இந்தியன் பனோரமாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை மத்திய அரசின் செய்தி அறிக்கை வெளியிட்டதை ’தேசிய விருதா’ய் ஊடகங்கள் கொண்டாடியதை புரிந்துக் கொள்ள முடிந்தது. உலகெங்கும் பாராட்டுக்கள். மணியோசை முன்னரே வந்துவிட்டது, யானை வரும் பின்னே! பின்னே வேறென்னச் சொல்லி சமாளிப்பது .?'' என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தியன் பனோரமாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை மத்திய அரசின் செய்தி அறிக்கை வெளியிட்டதை ’தேசிய விருதா’ய் ஊடகங்கள் கொண்டாடியதை புரிந்துக் கொள்ள முடிந்தது. உலகெங்கும் பாராட்டுக்கள்.
மணியோசை முன்னரே வந்துவிட்டது,
யானை வரும் பின்னே! பின்னே வேறென்னச் சொல்லி சமாளிப்பது .? pic.twitter.com/uXCvqmjFqQ
— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 21, 2020