கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியாகி வியக்க வைக்கும் அளவுக்கான வெற்றியைப் பெற்று வருகிறது.
Also Read | அடடே..! நடிகை காஜல் அகர்வாலின் பிறந்த குழந்தைக்கு சூட்டியுள்ள பெயர் இதுதான்!
கேஜிஎஃப்-கு கிடைத்த வரவேற்பு…
ஏப்ரல் 14 ஆம் தேதி கிட்டத்தட்ட 10,000 திரையரங்குகளில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் இரண்டாவது வாரத்திலும் ரிப்பீட் ஆடியன்ஸால் கூட்டம் குறையாமல் வெற்றிகரமாக ஓடி வருகிறது. தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) முதல் நாளில் ரிலீஸானது. ஆனால் படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டன.
குறையாத கூட்டமும் வசூலும்…
கேஜிஎஃப் 2 வெளியானது முதல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. முதல் இரண்டு நாட்களில் மட்டும் 240 கோடி ரூபாயை இந்தியாவில் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிலும் சிறப்பான வசூலை செய்து வருகிறது. பல புறநகர்ப் பகுதிகளில் படத்துக்குக் கூட்டம் அதிகமாக வருவதாக கூடுதலாக நாற்காலிகள் போட்டு காட்சிகள் திரையிடப்படுவதாக சொல்லப்படுகிறது. அதுபோலவே நள்ளிரவு காட்சிகள் மற்றும் அதிகாலை சிறப்புக் காட்சிகளும் திரையிடப்பட்டு வருகின்றன. மொத்தம் நான்கு நாட்களில் உலகளவில் 540 கோடி ரூபாயை இந்த படம் மொத்தமாக வசூல் செய்துள்ளது. இந்த வசூல் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் சாதனையாகப் பாரக்கப்படுகிறது. இந்த வசூல் சாதனைக்கு முக்கியக் காரணமாக ரிப்பீட் ஆடியன்ஸ் திரும்ப திரும்ப வருவதே காரணம் என்று சொல்லப்படுகிறது.
பின்னணிக் குரல் கலைஞர்…
இந்த படத்தின் இமாலய வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களாக படத்தின் வசனங்களும், யாஷுக்கு கொடுக்கப்பட்ட பின்னணிக் குரலும் அமைந்துள்ளன. வசனங்களை இயக்குனர் கே ஜி அசோக் எழுதியிருந்தார். ராக்கி பேசும் ஒவ்வொரு பன்ச் வசனங்களும் சமூகவலைதளங்களில் டிரண்ட்டாகி வருகின்றன. கேஜிஎஃப் படத்தின் இரு பாகங்களிலும் ஹிரோ யாஷுக்கு டப்பிங் பேசிய பின்னணிக் குரல் கலைஞர் பி ஆர் சேகர் சமூகவலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறார்.
இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். கேஜிஎஃப் மட்டுமில்லாமல் பாகுபலி இரண்டு பாகங்களிலும் பிரபாஸுக்கும் இவர்தான் டப்பிங் பேசியுள்ளார். கேஜிஎப் 2 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் மக்கள் இவரை அடையாளம் கண்டுகொண்டு ராக்கியின் வசனங்களைப் பேச சொல்லி கேட்டு வருகின்றனர்.
யார் யாருக்கெல்லாம் பேசி இருக்கிறார்…
1994 முதல் டப்பிங் கலைஞராக பணியாற்றி வரும், அஜித், வினீத், குனால், அப்பாஸ், ரிச்சர்ட் ரிஷி, ஷாம், நாகார்ஜுனா (தமிழில்) மற்றும் விவேக் ஓப்ராய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு பல படங்களில் குரல் கொடுத்துள்ளார். மேலும் ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விதமாக இவர் கொடுக்கும் பின்னணிக் குரல் நடிகர்கள் தாங்களே சொந்தமாக பேசுவது போன்ற உணர்வைக் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளன.
Also Read | ஸ்வீட் எடுங்க..அழகிய குழந்தைக்கு அம்மாவான காஜல் அகர்வால்.. குழந்தை ஆணா? பெண்ணா? செம தகவல்