ஆனந்த விகடன் தயாரிப்பில் தமன்னா, ஜி.எம்.குமார், பசுபதி, விவேக் பிரசன்னா, அருள் தாஸ், நந்தினி மற்றும் பலர் நடிப்பில் ராம் சுப்ரமணியன் என்கிற இந்திரா சுப்ரமணியன் இயக்கத்தில் ஹாட் ஸ்டாரில் வெளியாகிய வெப் சீரிஸ் ‘நவம்பர் ஸ்டோரி’.
கதைப்படி தமன்னாவின் அப்பாவாகவும் பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளராகவும் வரும் எம்.ஜி.குமார் எர்லி ஆன்செட் அல்ஸைமரால் ஞாபக மறதியுடன் இருக்கிறார்.
ஆனால் வருடந்தோறும் நவம்பர் 16-ஆம் தேதியை மறக்காமல் தன் பூர்வீக வீட்டுக்கு சென்று வருகிறார். அப்பாவின் சிகிச்சைக்காக அந்த பூர்வீக வீட்டை விற்க தமன்னா போராட, அந்த வீட்டில் ஒரு கொலை நடக்கிறது.
அந்த கொலை நடந்த இடத்தில் தமன்னாவின் தந்தையும் இருக்க, கொலை செய்தது யாரென கண்டுபிடித்து தந்தையை காப்பாற்ற தமன்னா களமிறங்குவதே கதை. இந்த படத்தில் நவம்பர் மாத தேதிகள் முக்கிய காரணிகளாக வருகின்றன.
7 எபிசோட்களாக உருவாகி வந்திருக்கும் இந்த நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸிற்கு, விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சரண் ராகவன் இசை அமைத்துள்ளார்.
#NovemberStory - சிறப்பு ஒளிபரப்பு - வரும் வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Tamannaah #Pasupathy #GMKumar #IndhraSubramanian #SaranRaghavan #VijayTelevision pic.twitter.com/em9ZxKFKYp
— Vijay Television (@vijaytelevision) May 31, 2021
இந்த சீரிஸ் விஜய் தொலைக்காட்சியில் வரும் வெள்ளி இரவு 10 மணிக்கு சிறப்பு ஒளிபரப்பாக வெளியாவதாக விஜய் டிவியில் ப்ரோமோ வெளியாகியுள்ளது.