வொர்க் அவுட் பண்ணறப்ப ஃபோன்ல எப்படி வீடியோ எடுக்கறது? சூப்பர் டிப்ஸ் தருகிறார் தமன்னா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா நோய்த் தொற்று பயம் அனைவரையும் வீட்டில் அடைத்து வைத்திருக்கிறது. இந்நிலையில் நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர். தங்கள் ரசிகர்களுடன் அவ்வப்போது லைவ்வில் வந்தும் பேசுகின்றனர்.

Tamannaah Bhatia work out tips in instagram goes viral

குறிப்பாக நடிகைகள், வீட்டு வேலை செய்வது, வீட்டை சுத்தப்படுத்துவது, வார்ட்ரோப்பை ஒழுங்கு படுத்துவது, சமையல் கற்றுக் கொள்வது, வொர்க் அவுட் செய்வது என்று தங்களை பரபரப்பாக வைத்துக் கொள்கின்றனர். மறக்காமல் அதை தங்களது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் ஷேர் செய்து பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

சமீபத்தில் தமன்னா தன் வீட்டில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, ‘ஜிம் ட்ரெயினரோட இப்படி டிஜிட்டல் வொர்க்அவுட் செய்யறது கூட சேலன்ஞ் இல்லை..  ஆனா இந்த ஃபோன் கீழ விழாம கரெக்ட் பொசிஷன்ல வைக்கறதுதான் பெரிய சேலன்ஞ்.

ஆஹா....மனமிருந்தா மார்க்கம் உண்டுங்க...டிஷ்யூ பேப்பர் பாக்ஸ் அப்பறம் ட்ரை ஃப்ரூட்ஸ் ட்ரே - இந்த ரெண்டும் இப்போதைக்கு ரொம்ப உதவியா இருக்கு. ட்ரைபாடுக்கு பதிலா இதை ட்ரை பண்ணுங்க. இந்த லாக்-ட்வுன் சமயத்தில என்னோட வொர்க் அவுட்டுக்கு இதுதான் ரொம்ப சப்போர்ட் பண்ணியிருக்கு. இந்த மாதிரி புது ஐடியாஸ் யோசிங்க....ஸ்மார்ட்டா இருங்க’ என்று ஜாலி பதிவு போட்டிருந்தார் தமன்னா.

இது அவரது ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Tamannaah Bhatia work out tips in instagram goes viral

People looking for online information on Corona, Tamannaah Bhatia, Tamannah Work out will find this news story useful.