ஊரடங்கின் போது சமூக வலைதளங்களில் பல விஷயங்கள் டிரெண்டாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குழந்தை பருவ ஃபோட்டோவை பதிவிடும் சேலஞ்ச் பிரபலமாகி வருகிறது. அதன் படி ஒருவர் தனது குழந்தை பருவ ஃபோட்டோவை பகிர்ந்து மற்றவரையும் அதனைச் செய்ய சேலஞ்ச் விடுக்கவேண்டும்.
அந்த வகையில் நடிகை டாப்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது சிறு வயதில் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். இது என்னோட பிறந்தநாள் இல்ல. ஆனால் நிறைய கேக் சாப்பிடுவேன். இத்தனை வருடங்கள் ஆகியும் இது இன்னும் மாறவில்லை. மேலும் முடி பின்னுவதும் மாறவில்லை. நல்லவேளை ரிப்பன் பழக்கம் எல்லாம் மறைந்துவிட்டது'' என்று தெரிவித்தார்.
டாப்ஸி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கேம் ஓவர்' விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. மேலும் அவரது நடிப்புக்கு பெரிதும் பாராட்டு கிடைத்தது. நடிகை டாப்ஸி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக விளங்குகிறார்.