இந்தியா முழுவதும் பிரபலமான நடிகை டாப்ஸி கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குவதற்கான இயக்குநர் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறியப்பட்டவர் நடிகை டாப்ஸி. தமிழில் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவரான டாப்ஸி, இந்தியிலும், அதாவது பாலிவுட்டிலும் வெற்றிநடை போடுகிறார்.
அந்த அகையில் சமீபத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் கேப்டனாக இருந்த கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘Shabaash Mithu’ படத்தில் மிதாலி ராஜ் கேரக்டரை ஏற்று டாப்ஸி நடிப்பார் என அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. டாப்ஸி நடிக்கவிருக்கும் பயோபிக் என்பதால் இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இந்த படத்தை தான், இயக்குநர் ராகுல் தொலக்யா இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்போது சில காரணங்களால் இப்படத்தில் இருந்து ராகுல் தொலக்யா விலக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் இயக்குனர் ஸ்ரீஜித் முகர்ஜி இப்படத்தை இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
Good luck #ShabaashMithu !! And for any further comments on this matter kindly contact @MandviSharma ! Thank you all ! pic.twitter.com/FLHTCMFTnR
— rahul dholakia (@rahuldholakia) June 22, 2021
இதுபற்றி தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இயக்குநர் ராகுல் தொலக்யா, துரதிர்ஷ்டவசமாக இப்படத்தில் இருந்து தாம் விலகுவதை உறுதி செய்ததுடன், ‘Shabaash Mithu’ திரைப்படத்துக்கு குட் லட் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: ரஷ்ய சாலையில், புடவையுடன் கெத்தாக நடைபோடும் தாப்ஸி!.. டாப் ட்ரெண்டிங் ஃபோட்டோ!