தமிழில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் நடிகை டாப்ஸி.
Also Read | Vikram 100th Day : "இத மட்டும் பண்ணுங்க".. விக்ரம் பட 100வது நாள் விழாவில் ரசிகர்களுக்கு கமல் கோரிக்கை
தொடர்ந்து தமிழில் கேம் ஓவர், அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்த டாப்ஸி, தொடர்ந்து, தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து மொழிகளிலும் ஏராளமான படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். பிரஸ் மீட், பேட்டிகளில் டாப்ஸியின் பேச்சு எப்போதுமே அனல் பறக்கும் வகையில் இருப்பதை காணமுடியும். முன்னதாக நிகழ்வு ஒன்றில் ஆங்கிலத்தில் பேசிய டாப்ஸியிடம், “நீங்கள் பாலிவுட் நடிகைதானே? இந்தியில் பேசலாமே?” என கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நடிகை டாப்ஸி, “நான் ஒரு தென்னிந்திய நடிகையும் கூட, தமிழ், தெலுங்கிலும் நடிக்கிறேன். அத்துடன் இந்தியில் பேசினால் இங்கிருக்கும் அநேகமான மற்றைய மொழிக்காரர்களுக்கு புரியாது. இந்தி புரிந்துகொள்ள முடியாதவர்கள் இருக்கிறீகளா?” என கேட்டார். அப்போது பலருக்கும் இந்தி தெரியவில்லை என பதில் வந்தது. உடனே டாப்ஸி இந்த பேச்சுக்காக வைரல் ஆனார்.
இதற்கு மத்தியில், பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், டாப்ஸி நடித்திருந்த 'டோபாரா' என்னும் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை டாப்ஸி கலந்து கொண்ட நிலையில், அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியும், இதற்கு டாப்ஸி அளித்த பதில் தொடர்பான நிகழ்வும் தற்போது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், டாப்ஸி நடித்து சமீபத்தில் வெளியான டோபாரா படத்திற்கு எழுந்த விமர்சனங்கள் குறித்து, டாப்ஸி கலந்துகொண்ட நிகழ்வின்போது அவரிடத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகை டாப்ஸி, “எந்த படத்திற்குதான் இது நடக்கவில்லை” என பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து, வேறு கேள்விகளை டாப்ஸி முன்பு வைக்கின்றனர்.
முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்றும், பிறகு உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்றும் டாப்ஸி குறிப்பிடுகிறார். கேள்வி கேட்பதற்கு முன் ஹோம் வொர்க் செய்து விட்டு வாருங்கள் என்றும் டாப்ஸி கூற, இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
Also Read | AR Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் அடுத்த Live இசைக் கச்சேரி இந்த நாட்டிலா?.. அறிவிப்பே அமர்க்களமா இருக்கே..!