Swiggy தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் குறித்து அந்நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
உணவு டெலிவரி செய்யும் செக்டாரில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கும் நிறுவனம் Swiggy. இதனிடையே தற்போது இந்நிறுவனத்தை சேர்ந்த டெலிவரி ஊழியர்கள், சம்பளம் மற்றும் போனஸ் குறைக்கப்பட்டதாக தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர். இதை தொடர்ந்து நடிகை சனம் ஷெட்டியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஊழியர்களின் பிரச்சனையை நிறுவனம் தீர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் தற்போது ஊழியர்களின் ஸ்டரைக் குறித்து Swiggy நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, ''Swiggy-யில் இப்போது ஒரு ஆர்டருக்கு 15 ரூபாய் மட்டுமே டெலிவரி ஊழியர்களுக்கு கிடைக்கிறது என்பது தவறான தகவல். உண்மையில் அதைவிட அதிகமாக சம்பாதிக்கும் ஊழியர்கள் இங்கு உள்ளனர். பல்வேறு காரணங்களை கணக்கிட்டே டெலிவரி ஆட்களுக்கான கட்டனம் முடிவு செய்யப்படுகிறது. எங்கள் நிறுவனத்தில் சிறந்த சம்பளத்தையே டெலிவரி ஆட்கள் பெறுகின்றனர்.
அதே போல, இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் பெரிய அளவில் உழைத்துள்ளனர். அவர்களுக்கு முடிந்தளவில் உதவிகள் வழங்கியே வந்திருக்கிறோம். இனி வரும் காலங்களிலும் அவர்களுடனான நல்லுறவையே விரும்புகிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.