பிரபல பாலிவுட் நடிகராக இருந்த சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவரது இறப்பு குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல், பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.
Also Read | "அசிம் அண்ணா, நீங்க கண் கலங்குனத பாத்தேன்".. வெளியேறிய பின் தனா சொன்ன வார்த்தை!!.. bigg boss tamil 6
இந்தியில் சின்னத் திரை தொடர்கள் மூலம் நடிப்பில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பெயர் எடுத்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து ஒரு சில தொடர்களில் நடித்த சுஷாந்த் சிங் இன்னும் பிரபலமாக, பாலிவுட் சினிமாவில் நடிகராகவும் அவர் அறிமுகமாகி இருந்தார்.
2013 ஆம் ஆண்டு வெளியான 'கை போ சே' என்ற பாலிவுட் திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமான சுஷாந்த் சிங், 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட சில திரைப்படங்கள் மூலம் சிறந்த நடிகர் என்றும் பாலிவுட்டில் தன்னை அவர் நிலை நிறுத்திக் கொண்டார்.
அமீர்கான் நடிப்பில், பெரிய அளவில் ஹிட்டாகி இருந்த பிகே திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங் நடித்திருந்தார். இதற்கடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "MS Dhoni The Untold Story" என்ற திரைப்படம், பாலிவுட் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் சுஷாந்த் சிங்கை பிரபலமாக்கி இருந்தது. இது பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதன் பின்னர், கடைசியாக சுஷாந்த் சிங் நடிப்பில், சிச்சோரே திரைப்படம் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம், மும்பை பந்த்ராவில் உள்ள தனது வீட்டில் சுஷாந்த் சிங் உயிரிழந்து கிடந்த விஷயம், ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உண்டு பண்ணி இருந்தது. மேலும் அவர் உயிரிழந்ததற்கான காரணங்கள் எதுவும் தெரியாமல் இருந்து வந்த நிலையில், விசாரணையின் அடிப்படையில் அவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஆனால், சுஷாந்த் சிங் அப்படி செய்திருக்க மாட்டார் என்றும், வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம் என்றும் ஒரு சிலர் கூறி வந்தனர்.
அப்படி ஒரு சூழலில், சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து சுஷாந்த் சிங் பிரேத பரிசோதனை குழுவில் இருந்த ஊழியர் ஒருவர் கூறியதாக வெளியான தகவல், கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் சிங் உடலை பார்த்தும் அது தற்கொலை கிடையாது என அந்த ஊழியர் சந்தேகப்பட்டதாகவும் அவரது உடலில் பல இடங்களில் தடயங்கள் இருந்ததாகவும், கழுத்தில் இரண்டு, மூன்று இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதே போல, பிரேத பரிசோதனையை வீடியோவாக பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், ஆனால் உயர் அதிகாரிகள் சுஷாந்த் சிங் உடலை போட்டோ மட்டும் எடுத்தால் போதுமானது என்றும் கூறியதாக அந்த ஊழியர் தற்போது குறிப்பிட்டுள்ளார். தனக்கு தற்கொலை என தோன்றவில்லை என்றும் ஆனால் அதனை கேட்காமல் சீனியர்கள் பிரேத பரிசோதனை செய்து இரவுக்குள் முடித்து கொடுத்ததாகவும் அந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது இருந்த ஊழியர் தற்போது தெரிவித்துள்ளதாக வைரலாகி வரும் வீடியோக்கள் பெரிய அளவில் திருப்புமுனையாக அமைந்ததாக சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். அதே வேளையில், இத்தனை நாட்களாக அந்த ஊழியர் ஏன் இது பற்றி எதுவும் கூறவில்லை என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
Also Read | விக்ரமன் பேச்சை கேட்டதும் கண் கலங்கிய கமல்ஹாசன்.. மறுகணமே அவர் படிக்க தொடங்கிய கடிதம்!!