தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளை திறந்ததாகக்கூறி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்வலையை கிளப்பியுள்ளது. இந்த செயலுக்கு மக்களும் பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்வத்திற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார் நடிகர் சூர்யா. அதில், “மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களைக் கூட மரண தண்டனை கூடாது’ என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீஸாரின் ‘லாக்கப் அத்துமீறல்’ காவல் துறையின் மாண்பை குறைக்கும் செயல் ‘இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம்’ என்று கடந்து செல்ல முடியாது’ என்று தொடங்கும் தனது நீண்ட அறிக்கையில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் சூர்யா.
அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும் - நடிகர் சூர்யா pic.twitter.com/ukpeGjBdhJ
— Behindwoods (@behindwoods) June 27, 2020