இன்று நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு பாண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படமான 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் போஸ்டர் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
இதனை தொடர்ந்து சூர்யா நடிக்கும் 39வது படத்தின் முதல் லுக் போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
அதன்படி படத்தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் தளத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். 'ஜெய்பீம்' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார்.
பழங்குடியின மக்களின் பின்னணியில் வழக்கறிஞராக சூர்யா நிற்பதுபோல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழ்க்கறிஞராக சூர்யா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தை 'கூட்டத்தில் ஒருத்தன்' படத்தை இயக்கிய தா.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். அகரம் பவுண்டேஷனின் மிக முக்கிய வழிகாட்டல் குழு பொறுப்பில் உள்ளவர் தான் தா.செ ஞானவேல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் சூர்யா உடன் 'கர்ணன்' ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் '2d என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டான் இசையமைக்கிறார்.