நடிகர் கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் நடத்திய விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய சிவகுமார் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் உணர்ச்சிகரமாக பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.
அஜித் -ஐ இயக்கும் 'சூரரைப்போற்று' சுதா கொங்கரா? G.V. பிரகாஷ் குமார் கொடுத்த வேற லெவல் அப்டேட்!
அகரம் மற்றும் உழவன் பவுண்டேஷன்ஸ்:
நடிகர் சிவக்குமாரின் மகன்களும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகவும் இருக்கும் சூர்யாவும் கார்த்தியும் சமூக அக்கறையோடு பல முன்னெடுப்புகளை செய்துவருகின்றனர். சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் கல்வி சம்மந்தமான பல முன்னெடுப்புகளை ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது. அதுபோல விவசாயத்தில் ஈடுபாடுள்ள கார்த்தி உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார்.
உழவன் விருதுகளில் அழுத சிவக்குமார்
இந்நிலையில் நேற்று உழவன் பவுண்டேஷன் சார்பில் விவசாயிகளுக்கு உழவன் விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சூர்யாவின் தந்தை சிவக்குமார், சகோதரர் சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பாரம்பரிய விதை மீட்பு, இயற்கை விவசாயம் மற்றும் அதை சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் புதுமையாக செயல்படும் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணமும் விருதுகளும் வழங்கப்பட்டன.
கண்கலங்கிய சிவகுமார்:
விழாவில் பேசிய நடிகர் சிவகுமார் தன் தாயாரைப் பற்றி பேசும் போது கண்ணீர் விட்டு கண்கலங்கினார். மேடையில் பேசிய போது ”உழவன் பவுண்டேஷன் தொடங்கிய கார்த்தி ஒரு ஏழை பெண் விவசாயியின் பேரன்தான். நான் பிறந்த 10 மாதத்தில் என் அப்பா இறந்துவிட்டார். என் அம்மாதான் அரளிசெடியும், எருக்கம் செடியும் இருக்கும் அந்த ஊரில் என்னை வளர்த்தார். அதனால்தான் நான் இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் அம்மா தனி ஆளாக விவசாய வேலைகள் செய்து என்னை காப்பாற்றினார். வேளாண்மையில் அதிகமான வேலைகள் செய்வது பெண்கள் தான். கடவுளை யாரும் பார்தததில்லை. சிலையை கும்பிடுகிறோம். பெண்கள்தான் கடவுள்” எனப் பேசிகொண்டு இருக்கும்போதே உணர்ச்சிவசப்பட்டு அழ ஆரம்பித்தார்.
அப்பாவைத் தொடர்ந்து சூர்யா:
சிவகுமாருக்கு பின் பேசிய சூர்யாவும் தந்தையின் பேச்சால் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினார். அவர் பேசும்போது ”கார்த்திக்கு இயற்கை ரொம்ப பிடிக்கும். இயற்கையை ரொம்ப நெருக்கமா வச்சுதான் பாத்துருக்காப்ல. நாங்க இப்ப ஸ்டேஜ்ல இருக்குறதால புல்லரிக்குது. எங்க அப்புச்சிக்கு ஆத்தாவுக்கு நன்றி சொல்லணும். இல்லாட்டி இப்படி ஒரு விஷயம் இருக்குன்னே தெரியாம போயிருக்கும். இதெல்லாம் பாக்கும்போது ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. மறுபடியும் கிராமத்துக்கு போகும்போதெல்லாம் எவ்ளோ பாடுபட்ருக்காங்க, அதெல்லாம் நமக்கு தெரியாமலெயே போயிடுச்சேன்னு ஒரு குற்றவுணர்ச்சி வந்து மனசுக்குள்ள பாக்க பாக்க அதிகமா இருந்துட்டே இருந்தது. அகரம் பவுண்டேஷன் நான் எதுக்காக ஆரம்பிச்சேனோ, எப்படி வந்து ரொம்ப நெருக்கமான நெனச்சு ஆரம்பிச்சேனோ அது போலவே கார்த்திக்கு இயற்கை ரொம்ப நெருக்கமான விஷயம்.” என கூறினார்.
மருமகளால புது பிரச்சனை .. அத்தை சொன்ன ஷாக் விஷயம்.. ரண களமான பாக்கியலட்சுமி வீடு