capmaari 90 others

பொங்கலுக்கு செம்ம வெயிட்டு...! - சூர்யாவும் ட்ரீட் தர ரெடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘என்.ஜி.கே’, ‘காப்பான்’ திரைப்படங்களை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Suriya's Soorarai Pottru teaser may be release on Pongal

சமீபத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் குனீத் மோங்காவுடன் இணைந்து நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பேனரில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘சர்வம் தாள மயம்’ படத்தில் நடித்த அபர்ணா முரளி நடித்துள்ளார். மேலும்,  கருணாஸ், ஊர்வசி, ஜாக்கி ஷ்ரோஃப் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தில் சூர்யா நடித்துள்ள ‘மாறா’ கேரக்டருக்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஸ்பெஷல் தீம் மியூசிக் ஒன்றை கம்போஸ் செய்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற கார்த்தி மற்றும் ஜோதி இணைந்து நடித்துள்ள ‘தம்பி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய  2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவன அதிகாரி ராஜசேகர் பாண்டியன் பேசுகையில், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் டீசர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என தெரிவித்தார். இதையடுத்து, சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Suriya's Soorarai Pottru teaser may be release on Pongal

People looking for online information on 2D Entertainment, Soorarai Pottru, Sudha Kongara, Suriya will find this news story useful.