KAAPAN USA OTHERS

வசூலை வாரி குவிக்கும் சூர்யாவின் காப்பான் - பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா, மோகன் லால் நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படம் வார இறுதி நாட்களில் தமிழ்நாடு முழுவதும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.

Suriya's Kaappaan Tamilnadu Box Office Collection Weekend reports

‘அயன்’, ‘மாற்றான்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படம் கடந்த செப்.20ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயீஷா, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

‘காப்பான்’ படத்தில் மோகன்லால் பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்புப் படை தலைமை அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படம் சென்னை பாக்ஸ் ஆபீசில் முதல் இரண்டு நாட்களில் நல்ல வசூலை ஈட்டியது. அதைத் தொடர்ந்து வார இறுதிநாட்களில் பெரும்பாலான திரையரங்குகளில் காலை 8 மணி காட்சிகளே ஹவுஸ்ஃபுல்லானது.

இந்நிலையில், வார இறுதி நாட்களில் சென்னை பாக்ஸ் ஆபீஸில் ரூ.2.9 கோடியும், ரிலீசாகி 3 நாட்களில் தமிழகம் முழுவதும் ரூ.24.40 கோடி வசூலித்துள்ளது. இதனால், இனி வரும் நாட்களில் ‘காப்பான்’ திரைப்படத்திம் வசூல் அதிகரிக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Suriya's Kaappaan Tamilnadu Box Office Collection Weekend reports

People looking for online information on Box Office Collection, Kaappaan, Mohanlal, Suriya will find this news story useful.