இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து பகீர் கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியா சினிமாவின் முன்னணி இயக்குநராக இருப்பவர் ராம்கோபால் வர்மா. தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தமிழில் நடிகர் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் படத்தை இயக்கினார். இவர் தற்போது தெலுங்கில் Enter the Girl Dragon என்கிற படத்தை இயக்கியுள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது சர்ச்சையான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்த பகீர் கருத்தை தெரிவித்தார். ''தனக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் என டாக்டர்கள் சொல்லிவிட்டதாக'' அவர் ட்வீட் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பிறகு, ''மன்னிக்கவும், அது என்னை ஏப்ரல் ஃபூல் செய்ய என் டாக்டர் சொன்னது, என் மீது எந்த தவறுமில்லை'' என ட்வீட் செய்து ரிலாக்ஸ் கொடுத்துள்ளார். மேலும், 'இந்த கடினமான சூழ்நிலையை கொஞ்சம் லேசாக்கதான் இப்படி நகைச்சுவையாக பதிவிட்டேன், ஏதாவது புண்படும்படி இருந்திருந்தால் மன்னிக்கவும்'' என தெரிவித்துள்ளார்.
My doctor just told me that I tested positive with Corona
— Ram Gopal Varma (@RGVzoomin) April 1, 2020
Sorry to disappoint, but now he tells me it’s a April Fool joke 😳 it’s his fault and not mine
— Ram Gopal Varma (@RGVzoomin) April 1, 2020
Anyway I am just trying to make light of a grim situation but the joke is on me and if I dint offend anyone I sincerely apologise to them
— Ram Gopal Varma (@RGVzoomin) April 1, 2020