உங்கள் குழந்தைக்கு இருக்கும் தனித்திறமை என்ன..? சூர்யா டீமின் சூப்பர் பட வாய்ப்பு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யாவின் 2D Entertaintment கம்பெனி குழந்தைகளுக்காக ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குழந்தைகளுக்காக சூர்யா கம்பெனியின் காம்பட்டீஷன் | suriya's 2d entertaintment offers a competiton for children to show their talents.

உலகம் முழுவதும் தற்போது கரோனா வைரஸ் குறித்த அச்சம் பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவிலும் அது எதிரொலித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு ஊர்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களும் குழந்தைகளும் தற்போது விட்டிற்குள்ளேயே உள்ளனர்.

இந்நிலையில் வீட்டிற்குள்ளேயே இருக்கும் குழந்தைகளின் தனித்திறமையை காட்டினால் ஒரு அருமையாக வாய்ப்பு கிடைக்கும் என சூர்யாவின் 2D Entertaintment நிறுவனம் அறிவித்துள்ளது. 6 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளின், நடனம், ஸ்கேட்டிங், ஜிம்னாஸ்டிக் திறமைகளை வீடியோ எடுத்து 2dproductionno8@gmail.com என்ற மெயில் ஐடிக்கு அனுப்ப வேண்டும். அல்லது 917904287619 என்ற என்னுக்கு வாட்சப்பில் அனுப்ப வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகளை ஆடிஷன் செய்து, சூர்யா கம்பெனி எடுக்கவிருக்கும் 8-வது படத்தில் நடிக்க வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

குழந்தைகளுக்காக சூர்யா கம்பெனியின் காம்பட்டீஷன் | suriya's 2d entertaintment offers a competiton for children to show their talents.

People looking for online information on 2D Entertaintment, Casting call, Coronavirus, Soorarai Pottru, Suriya will find this news story useful.