சூர்யா நடிக்கும் சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார். வசனங்களை மதன் கார்க்கி எழுதி உள்ளார்.
இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மிலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். எடிட்டராக நிஷாத் யூசுப் பணிபுரிகிறார்.
இந்த படத்தின் தலைப்பு நாளை ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படம் 10 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் முப்பரிமாண முறையில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஒரு வலிமைமிக்க வீரம் மிக்க கதை' என்ற வாசகத்துடன் மோஷன் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை பிரபல சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் மதன் கார்க்கி ஆகியோரது பெயர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Let the Music of Victory and valiancy resonate with grandeur!
The audio rights of #Suriya42 acquired by @saregamasouth 🥁#Suriya42WithSaregama#Saregama
🎶 A @ThisIsDSP Musical
✍️ @Viveka_Lyrics @madhankarky@Suriya_offl @DishPatani @directorsiva @StudioGreen2 @kegvraja pic.twitter.com/vlJVz08JYl
— Studio Green (@StudioGreen2) April 15, 2023