நடிகர் சூர்யா தேசிய விருது வழங்கும் விழாவில் கமல்ஹாசன் கொடுத்த விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை அணிந்து வந்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்தனர்.
நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் பெயரில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்தார். மேலும் உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு TVS அப்பாச்சி மோட்டார் பைக்குகளையும் பரிசளித்தார்.
நடிகரும் தயாரிப்பாளருமான கமல், விக்ரம் படத்தில் நடித்த சூர்யாவுக்கு விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை அவரது வீட்டிற்கே பரிசாக வழங்கினார். இந்த ரோலக்ஸ் கைக்கடிகாரம், Day Date 40 mm Ever Rose மாடல் கோல்டு வாட்ச் ஆகும். Sun Dust Dial உடன் Baguette வைரம் பதித்த 18 கேரட் ரோஸ் கோல்டு வாட்ச் இது. இதன் கோயம்புத்தூர் ரோலக்ஸ் ஷோ ரூமின் மதிப்பு 30,96,000 ரூபாய் ஆகும்.
இத்தகையதொரு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை அணிந்து சூர்யா சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையிலிருந்து பெற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.