சென்னை: சூர்யா நடிப்பில் ET படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி பகுதியில் நடைபெற்று வந்தது. ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் காரைக்குடி படப்பிடிப்பு நிறைவடைந்தது என இயக்குனர் பாண்டிராஜ் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்றது. இந்த படத்தின் அனைத்து வசனங்களுடைய படப்பிடிப்பும் (26.09.2021) முடிவடைந்தது. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் (11.10.2021) அன்று முடிந்துவிட்டதாக இயக்குனர் பாண்டிராஜ் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தார்.
பின்னர் படப்பிடிப்பு, பின் தயாரிப்பு பணிகள் முடிந்து இந்த படம் சென்சாராகி உள்ளது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 150:38 (2:30:38) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட திருத்தப்பட்ட காட்சிகளின் விவரம் விரைவில் வெளியாகும்.
மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் PAN INDIA படமாக வெளியாக உள்ளது. முதலில் வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. பின் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.
பின் ET படம் வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. கச்சிதமான எடிட்டிங் உடன் மாஸ் ஆன சண்டைக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. டீசரில் சூர்யா, பிரியங்கா மோகன், வினய் தோன்றுகின்றனர்.
"மூன்று நாட்களாக இந்த படத்தை பார்த்தேன்" - விஜய் ஆண்டனி நடித்த படத்தை பாராட்டிய Dr. ராமதாஸ்