மதுரை: முதல் முறையாக சூரரைப்போற்று திரைப்படம் மதுரையில் தியேட்டரில் வெளியாகி உள்ளது.
BOX OFFICE: புஷ்பா படத்தின் அள்ள அள்ள குறையாத வசூல்! 50 வது நாளில் செய்த மகத்தான சாதனை
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 12-ல் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக அமேசான் பிரைம் ஒடிடியில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
கேப்டன் கோபிநாத் அவர்களின் ஏர் டெக்கான் நிறுவனத்தின் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து Simply Fly என்ற கோபிநாத்தின் புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது.
இந்நிலையில் இந்த படம் ஒடிடி ரிலீசுக்கு பின் முதல் முறையாக திரையரங்கில் வெளியாகி உள்ளது. மதுரை மாநகரில் உள்ள மருதநாயகத்தை தூக்கில் இட்ட இடமான சம்மட்டி புரத்தில் உள்ள பிரபலமான பழமையான மிட்லாண்ட் தியேட்டரில் இன்று முதல் வெளியாகி உள்ளது.
காலை காட்சிக்கு சூர்யா ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர். மேளதாளம் முழங்க, சூர்யாவின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்தனர். இதற்கான டிக்கெட் முன்பதிவு ஒரிரு நாட்களுக்கு முன் துவங்கியது. ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் வீதம் திரையிடப்படுகிறது.
78-வது கோல்டன் க்ளோப் அவார்ட்ஸ் நிகழ்வில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் திரையிடப்பட்ட 10 சிறந்த இந்திய படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட வட்டார மொழி படமாகவும் சாதனை படைத்தது. IMDB தரவரிசையில் 'தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்' மற்றும் 'தி காட்பாதர்' படங்களுக்கு அடுத்து 9.1 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தை சூரரைப் போற்று பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உடல் அரசியலுக்கு ஆதரவாக களமிறங்கிய இலியனா! எடிட் செய்யாத ஒரிஜினல் PHOTO-வை வெளியிட்டு பரபரப்பு
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ET படம் வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'.
மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் PAN INDIA படமாக வெளியாக உள்ளது. முதலில் வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. பின் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.
சூர்யா ரசிகர்களுக்கு பிப்ரவரி 4ல் ET ரிலீஸ் ஆகாத குறையை சூரரைப்போற்று தீர்த்து வைத்துள்ளது.
'வலிமை' படத்துடன் மோதும் 'RRR' புகழ் ஆலியா பட் நடித்த புதிய படம்! வெளியான கலர் ஃபுல் டிரெய்லர்