சூர்யா - பிரியங்கா மோகன் நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
Also Read | EXCLUSIVE: "அஜித் கிட்ட இந்த கேள்வி கேக்கனும்".. விஜய் என் தம்பி..! மனம் திறந்த ஆமிர் கான்!
நடிகர் சூர்யா நடிப்பில், கடந்த (10.03.2021) அன்று திரையரங்குகளில் வெளியாகிய திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த சூர்யாவின் 40வது திரைப்படம் இது. சூர்யா நடிப்பில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகியது.
இதற்கு முன்பு அவரின் நடிப்பில் வெளியாகியிருந்த 'சூரரைப் போற்று' மற்றும் 'ஜெய்பீம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும், ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. கடைசியாக 'காப்பான்' திரைப்படம் தான், கடந்த 2019 ஆம் ஆண்டில், திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.
மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் PAN INDIA படமாக ET வெளியாகியது.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ISC ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்து இருந்தார்.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். நடிகர் சத்யராஜ், புகழ், சூரி, பஞ்சு சுப்பு, வினய் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்தனர்.
இந்நிலையில் இந்த திரைப்படம் முதல் முறையாக வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நெட்பிளிக்ஸில் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூர்யாவின் பட்டித்தொட்டி எங்கும் பட்டைய கிளப்பிய "எதற்கும் துணிந்தவன்" வரும் August 14 அன்று மாலை 6.30 மணிக்கு!#WorldTelevisionPremiere #EtharkumThuninthavan #ETOnSunTV @Suriya_offl @priyankaamohan @pandiraj_dir #Sathyaraj @immancomposer @VinayRai1809 @sooriofficial pic.twitter.com/gwPIvX42sy
— Sun TV (@SunTV) August 7, 2022
Also Read | தனியே தன்னந்தனியே.. லண்டனில் உள்ள பூங்காவில் பிரியங்கா மோகன்.. செம வைரலாகும் Throwback போட்டோஸ்!