www.garudavega.com

அண்ணன் மாதிரி அன்பு. மாற்றுத்திறனாளி ரசிகருக்கு சூர்யாவின் சர்ப்ரைஸ்.. நெகிழ்ச்சி வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடித்து சமீபத்தில், திரையரங்குகளில் வெளியாகியிருந்த திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'.

Suriya love for disable talented fan won hearts

பாண்டிராஜ் இயக்கத்தில், உருவாகியிருந்த திரைப்படம், கடந்த மார்ச் 10 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது.

இதில், சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இவர்களுடன் வினய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

அமோக வரவேற்பு

எதற்கும் துணிந்தவன் திரைப்படம், குடும்பங்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யா தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது. திரைப்படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் சூர்யா.

Suriya love for disable talented fan won hearts

சூர்யாவின் அறப்பணிகள்

ஒரு பக்கம் நடிப்பு, தயாரிப்பு என கவனம் செலுத்தி வந்தாலும், இன்னொரு பக்கம் தன்னுடைய அறப்பணிகள் மூலம் அதிகம் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் சூர்யா. 'அகரம்' அறக்கட்டளை மூலம், பல ஏழை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவிய சூர்யா, தொடர்ந்து தன்னாலான உதவியையும், ஆதரவையும் ஏழை மக்களுக்கு அளித்துக் கொண்டே வருகிறார்.

நெகிழ வைத்த சூர்யா

அந்த வகையில், தற்போது நடிகர் சூர்யா செய்த செயல், மீண்டும் ஒரு முறை ரசிகர்களை நெகிழ செய்துள்ளது. மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர், சூர்யாவை நேரில் பார்க்க வேண்டும் என தனது சகோதரியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு வேண்டி, அந்த சகோதரியும் முயற்சிகள் எடுத்து, சூர்யாவை நேரில் சந்திக்க ஏற்பாடு மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அண்ணன் போல அன்பு

தொடர்நது, தன்னுடைய மாற்றுத் திறனாளி ரசிகரை நேரில் சந்தித்த சூர்யா, அவருடன் அன்பாக பேசி ஃபோட்டோவும் எடுத்துக் கொண்டார். இதில், அந்த மாற்றுத்திறனாளி ரசிகர், சூர்யாவின் தோள் மீது கை போட்டு, தன்னுடைய உடன் பிறந்த சகோதரனை போல அன்பை செலுத்திக் கொண்டார். மேலும், ரசிகரை கட்டிப் பிடித்து, அவரிடம் அன்பு காட்டினார் நடிகர் சூர்யா.

இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. பலரும் சூர்யாவின் பண்பு குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அண்ணன் மாதிரி அன்பு. மாற்றுத்திறனாளி ரசிகருக்கு சூர்யாவின் சர்ப்ரைஸ்.. நெகிழ்ச்சி வீடியோ வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Suriya love for disable talented fan won hearts

People looking for online information on Etharkum Thuninthavan, Fan, Heartwarming, Suriya, Viral video will find this news story useful.