Kadaisi Vivasayi Others
www.garudavega.com

JAI BHIM, OSCAR 2022: 94வது ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் சூர்யா-வின் 'ஜெய் பீம்' இருக்கா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Los Angeles: அமேசான் பிரைமில் கடந்த தீபாவளி வெளியீடாக நவம்பர் மாதம் உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆன படம் ஜெய் பீம். இந்த படத்திற்கு ஆஸ்கார் கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

Suriya Jai Bhim film not in final Oscar nominations list

ஜெய்பீம்

தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு புனையப்பட்ட இந்த படட்தை த.செ.ஞானவேல் இயக்க, திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

Suriya Jai Bhim film not in final Oscar nominations list

வழக்கறிஞர் சந்துரு

வழக்கறிஞர் சந்துருவாக, சூர்யா நடித்திருந்தார். காவல் துறையினரிடம் பொய் வழக்கில் சிக்கி இறந்துபோகும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞராக சூர்யா வாதிடும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டராக ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் ஆகியோர் பணியாற்றியுள்ளார்.

Suriya Jai Bhim film not in final Oscar nominations list

குவிந்த அங்கீகாரம்

முன்னதாக ஜெய்பீம்' படம் தமிழக கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பட்ட மக்களால் பாராட்டபட்டும், வெகு சிலரால் விமர்சிக்கப்படும் வந்தது. எது எப்படியோ ஒரு விவாதத்தை சமூகத்தில் உண்டு பண்ணும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய இந்த திரைப்படத்தின் காட்சிகள் சில தினங்களுக்கு முன் ஆஸ்கார் விருது யூடியூப் சேனலில் காட்சி இடம் பெற்றன.

Suriya Jai Bhim film not in final Oscar nominations list

94வது ஆஸ்கர் விருது - இறுதிப் பரிந்துரைபட்டியல்

இந்நிலையில் 94 வது ஆஸ்கர் விருதுக்கு தகுதியான பரிந்துரை பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பிரிவிற்காக 276 படங்களில் ஒரு படமாக ஜெய்பீம் இடம் பிடித்திருந்தது. ஆனால் இந்த பரிந்துரைப் பட்டியலில் இருந்து 10 படங்களே இறுதிப் போட்டிக்கான நாமினேஷன் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற முடியும். அதன்படி, அந்த 10 படங்களின் வரிசையில் 'ஜெய் பீம்' திரைப்படம் இடம்பெறவில்லை.

Suriya Jai Bhim film not in final Oscar nominations list

Writing With Fire - இடம் பிடித்த இந்திய ஆவணப்படம்

இதனிடையே இந்த ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் ஒரே இந்திய ஆவணப்படமாக ரைட்டிங் வித் ஃபயர் (Writing With Fire) என்ற ஆவணப்படம் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் தலித் பெண்களால் நடத்தப்படும் 'கபர் லஹரியா' பத்திரிகை  வரலாற்றை பற்றி 'Writing With Fire' ஆவணப்படம் பேசுகிறது. ரிந்து தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷ் என்ற இருவர் இணைந்து இந்த ஆவண படத்தை இயக்கியுள்ளனர்.

Also Read: "100 நாளும் தூண்டிவிட்டு பரபரப்பை உருவாக்குவாங்க".. #BiggBoss ரேகா பரபரப்பு பேச்சு!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Jai Bhim film not in final Oscar nominations list

People looking for online information on Jai Bhim, Jai Bhim not in Oscar nominations list, Jai Bhim Oscar nomination, Jai Bhim Oscar nominations list, Suriya will find this news story useful.